Home இலங்கைவரவு செலவுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு ஒன்று நடத்தப்பட உள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தெளிவுபடுத்தப்பட உள்ளனர்.

ஹம்பாந்தோட்டை ஷங்கரீலா நட்சத்திர ஹோட்டலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 13ம் மற்றும் 14ம் திகதிகளில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த செயலமர்வில் பங்கேற்க உள்ளனர். பிரதமர் அலுவலகமும் நிதி அமைச்சும் இந்த செயலமர்வினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More