குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
ரஸ்ய நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட ரசிகர் ஒருவர் ஜெர்மனியின் முனிச் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டில் நடைபெற்ற யூரோ கிண்ணப் போட்டியின் போது குறித்த ரஸ்ய ரசிகர் நடத்திய தாக்குதலில் இங்கிலாந்து கால்பந்தாட்ட ரசிகர் ஒருவர் காயமடைந்திருந்தார்.
இந்த ரஸ்ய பிரஜை தேடப்பட்டு வருவோர் பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில் மொஸ்கோவிலிருந்து ஜெர்மனிக்கு திரும்பிய போது அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த நபருக்கு எலும்புகள் முறிந்துள்ளதுடன், மூளை மற்றும் சுவாசப்பை ஆகியனவற்றுக:கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
பிரான்ஸில் யூரோ கிண்ணப் போட்டிகள் நடைபெற்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் குறித்த ரஸ்ய பிரஜைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.