குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பேரும் வெலிக்கடை சிறைச்சாலை தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இருவரையும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதி முக்கிய பிரபுக்கள் சிறையில் அடைக்கப்படும் போது இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.