குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இலங்கையில் பொறுப்பு கூறுதல் விவகாரம் தொடர்பில் வேறும் வழிகளில் முயற்சிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37ம் அமர்வுகள் தொடர்பிலான அல் ஹூசெய்னின் அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள ஆக்கபூர்வமான தொடர்பு வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். காலமாறு நீதிப் பொறிமுறைமை அமுல்படுத்துவதற்கான முனைப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் விவகாரத்தில் இலங்கை மிகவும் மந்த கதியில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பொதுவான மனித உரிமை விவகாரத்தில் இலங்கையில் ஓரளவு முன்னேற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.