குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலியாவின் பிரதிப் பிரதமர் பர்னாபை ஜொய்ஸ் ( Barnaby Joyce) பதவி விலகியுள்ளார். பிரதிப் பிரதமர் ஜொய்ஸ் முன்னாள் பணியாளர் ஒருவருடன் தகாத உறவு பேணியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு அரசியல் ரீதியாக பெரும் சவால்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவர் பதவிவிலகியுள்ளார். தம்மைப் பற்றிய சர்ச்சைகள் செய்திகள் குடும்பத்தை பாதிப்பதாகவும் இதனால் தாம், பதவிவிலகுவதாகவும் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நசனல்ஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும், பிரதிப் பிரதமர் பதவியிலிருந்தும் தாம் விலகிக் கொள்வதாக ஜொய்ஸ் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். அதேவேளை பிரதிப் பிரதமர் இதுவரை காலமும் வழங்கிய சேவைகளை பாராட்டுவதாகவும் அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் மெல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.