கனடாவில் வசித்து வருகின்ற வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட உலக சாதனை வீரன் சுரேஸ் ஜோகிமின் வறுமை ஒழிப்பு, நோய் ஒழிப்பு, யுத்தம் மின்மையை வலியுறுத்தி சமாதானத்திற்கான மரதன் ஓட்டம் இன்று(24) மாலை நான்கு மணிளவில் கிளிநொச்சியில் இடம்பெற்றது
ஏழு கண்டங்களில் 72 நாடுகளில் 123 நகரங்களில் 270 நாட்கள் தனது மரதன் ஒட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இவர். தற்போது ஆபிரிக்கா, அவுஸ்ரேலியா கண்டங்களில் நிறைவு செய்து தற்போது ஆசிய கண்டத்தின் இலங்கையில் ஓடி வருகின்றார்.
கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி யேசு கிறிஸ்த்து பிறந்த ஜெருசலமே நகரில் ஆரம்பித்த தனது சமாதானத்திற்கான மரதன் ஓட்டத்தை வரும் செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதி கனடாவில் நிறைவு செய்யவுள்ளார். இதுவரை பல்வேறு துறைகளில் 69 கின்னஸ் சாதனைகளை படைத்த சுரேஸ் ஜோக்கிம் , கிருஸ்ணமூர்த்தியின் இயக்கத்தில் வைரமுத்து,இசையமைப்பாளர் தேவா, விவேக் மீராஜஸ்மின் ஆகியோருடன் இணைந்து சிவப்பு மலை எனும் முழு நீளத் திரைப்படத்தை குறுகிய காலத்திற்குள் நடித்து சாதனைப் படைத்துள்ளார்
இவர் கிளிநொச்சியில் தனது இலங்கான 21 km தூரத்தை புனித திரேசா ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து கிளிநொச்சி நகரில் ஓடி முடித்துள்ளார