Home இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை தமிழரசுக் கட்சி   வரவேற்கிறது…

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை தமிழரசுக் கட்சி   வரவேற்கிறது…

by admin

 

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் பிரேரணை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் அவர்களின் அறிக்கையை தமிழரசுக் கட்சி   வரவேற்பதாக தெரிவித்துள்ளது. கொழும்பில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு இதனை ஏகமானதாக ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

“தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முகமாகவும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் முகமாகவும் இலங்கை அரசாங்கமானது சர்வதேசத்திற்கு வழங்கிய உத்தரவாதங்களை கடுமையாகப் பின்பற்ற வேண்டுமென நாம் வலியுறுத்தி நிற்கின்றோம். மேலும், இந்த உத்தரவாதங்களிலிருந்து விலகக் கூடாது எனவும் இந்நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டுமெனவும் நாம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் முன்மொழிவுகளை முழுமையாக வரவேற்கின்ற அதேவேளை, இலங்கை அரசாங்கத்துடன் பயனுறுதிமிக்க, நெருங்கிய அவதானிப்பையும் செலுத்துமாறு அங்கத்துவ நாடுகளிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குதல், பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்துள்ளன. ஆனால், இவ்விடயங்கள் தொடர்பில் மந்தகதியான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மத்தியில் அதன் நடவடிக்கைகளில் காணப்படும் நம்பகத்தன்மை குறித்து பாரிய கரிசனையைத் தோற்றுவித்துள்ளது.

மேற்குறித்த விடயங்கள் தொடர்பிலும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் முன்மொழிவுகள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கமானது பொறுப்புக்கூறலுடன் நடந்து கொள்வதனை உறுதி செய்யுமாறு சர்வதேச சமூகத்திடம் நாம் மிக வினயமாகக் கேட்டுக் கொள்ளுகின்றோம். அத்தோடு, இணை அனுசரணை வழங்கிய ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தினை, துரித நடவடிக்கைகளை எடுத்து எவ்வித தாமதங்களுமின்றி முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

ஐ.நா.மனித உரிமைப் பேரவை ஆணையாளருக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கின்ற அதேவேளை இந்த முன்மொழிவுகளுக்கு இலங்கை அரசாங்கம் தான் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் முக்கியத்துவம் கொடுத்து நடைமுறைப்படுத்துவதனை ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம், சர்வதேச அமைப்புக்கள் மற்றும் ஏனைய அங்கத்துவ நாடுகள் உறுதி செய்ய வேண்டுமென அதிகமாகப் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் சார்பில் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.” என தமிழரசுக்கட்சி தனது மத்திய குழுவின் ஊடாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

2 comments

Logeswaran February 25, 2018 - 9:46 am

தமிழரசுக் கட்சியோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது மற்றய தமிழ்க் கட்சிகளோ இன்றுவரை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை முறையாகச் செயல்படுத்தத் தேவைப்படும் ஒரு கால அட்டவணையை உருவாக்கி கடுமையான அழுத்தத்தை அரசாங்கத்தின் மேல் கொடுக்கவில்லை. இதனால் தமிழ் மக்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்புகளை இழந்துள்ளனர். தமிழ்க் கட்சிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றவில்லை.

Reply
Logeswaran February 25, 2018 - 3:14 pm

Get the key commitments (given below) based on the conclusions and recommendations (February 2018) of the
United Nations High Commissioner for Human Rights implemented.

1. Build confidence.
2. Fulfil the transitional justice.
3. Make progress on accountability and reforms.
4. Consolidate structures to coordinate implementation.
5. Receive sufficient political support to move things forward.

6. Eliminate intermittent inter-ethnic tensions.
7. Dissipate attacks on the minorities completely.
8. Stop hate speech, misinformation and agitation through social media and political manipulation.

9. Stop torture.
10. Stop surveillance.

11. Release the land.
12. Find a solution to the pending cases.
13. Repeal the Prevention of Terrorism Act.

14. Human Rights Council should play a critical role in encouraging progress in accountability and reconciliation in Sri Lanka.
15. Call Member States to explore other avenues, including the application of universal jurisdiction that could foster accountability.

ஸ்ரீ லங்காவில் உள்ள தமிழ்க் கட்சிகளும் மற்றும் வெளிநாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகளும் இராஜதந்திரிகர்களிடையே விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி இங்கு கொடுக்கப்பட்ட பணிகளை அவர்களின் அரசாங்கங்கள் மூலம் அமுல்படுத்தி வைக்க வேண்டும்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More