சண்டிலிப்பாய், யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட 1958 இனக்கலவரத்திற்குப் பின் புலம்பெயர்ந்து லண்டனில் Institute for Race Relations இன் பணிப்பாளராக கடமையாற்றிய மூத்த இடதுசாரி சிந்தனையாளர் அ. சிவானந்தன் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்திற்கு அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் உங்களை அழைக்கின்றது.
அறிமுக உரை: சிவானந்தனின் வாழ்வும் பணியும்:
தற்கால தமிழ் சமூகம் கற்றுக் கொள்ள வேண்டியவை
குமாரவடிவேல் குருபரன்,
நிறைவேற்றுப் பணிப்பாளர், அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம்
நினைவு உரை: சுயநிர்ணயப் போராட்டங்களும் வர்க்கப் போராட்டங்களும்: உரையாடலைப் புதுப்பித்தலின் அவசியம்
சிந்துஜன் வரதராஜா,
கலாநிதிப் பட்ட ஆய்வாளர், இலண்டன் பல்கலைக்கழகம்
——————————————————————–
இடம்: அறை எண் 207, கலைப் பீடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
நேரம்: 2 மணி, செவ்வாய்க் கிழமை, 27 பெப்ரவரி 2018.