குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை விடுவிக்குமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது. சுமார் 120 படகுகளை மீள ஒப்படைக்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது. இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த காரணத்தினால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை மீள ஒப்படைக்க முடியாது என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை குறித்து அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்ற இரு நாடுகளுக்கும் இடையிலான அமைச்சு மட்டப் பேச்சுவார்த்தையின் போதும் படகுகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், இந்திய மீனவப் படகுகளை விடுவிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்கத்கது.