குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அமெரிக்க புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐயின் பணிப்பாளரே தமது தோல்விக்கு காரணம் என ஹிலரி கிளின்ரன் தெரிவித்துள்ளார். பிரச்சாரப் பணிகள் உச்ச கட்டத்தை அடைந்திருந்த போது கடந்த கால மின்னஞ்சல் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் எப்.பி.ஐ விசாரணை நடத்துவதாக விடுத்திருந்த அறிவிப்பே தமது தோல்விக்கான பிரதான காரணம் என ஹிலரி கிளின்ரன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் James Comey யே தமது தோல்விக்கான காரணம் என தொலைபேசி உரையாடல் ஒன்றின் போது ஹிலரி தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, ஜனாதிபதியாக தெரிவான டொனால்ட் ட்ராம்பிற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றன. ட்ராம்ப்பின் வெற்றியை எதிர்த்து சில மாநிலங்களில் வீதியில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.