சவூதி அரேபியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒருபகுதியாக ராணுவத்தில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ராணுவத்தில் பெண்கள் பணிபுரிவது கட்டாயமக்கப்படவில்லை.
கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியிட்ட பொது பாதுகாப்பு இயக்குநரகம், ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு தொடர்பான அறிக்கையின்படி ரியாத், மக்கா, மதீனா, உள்ளிட்ட பல நகரங்களில் ராணுவத்தில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அதற்கான தகுதிகளாக அந்த நாட்டின் குடிமகளாக இருப்பதுடன் கல்வித் தகுதியாக, உயர்நிலை பாடசாலைக் கல்வி அல்லது பட்டயப்படிப்பு படித்திருக்கவேண்டும் எனவும் 25 இலிருந்து வரம்பு 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த திட்டத்தின்படி, ராணுவப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் ஆண்டில் மூன்று மாதங்கள் கட்டாயம் பணிபுரியவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதியில் பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கான கட்டுப்பாடுகள் அண்மையில் தளர்த்தப்பட்டுள்ளதுடன பெண்கள் கால்பந்து போட்டிகளை பார்க்க விளையாட்டு அரங்குகளுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது