குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தலிபான்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஸ்ரப் கானி தெரிவித்துள்ளார். எவ்வித முன் நிபந்தனைகளும் இன்றி தலிபான்களுடன் சமாதானப் பேச்சுகளுக்குத் தயார் என அவர் அறிவித்துள்ளார். கடந்த பதினாறு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் யுத்தம் புரிந்து வருகின்றநிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் யுத்த நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் போன்றன குறித்த யோசனைகளையும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த யோசனைகள் தொடர்பில் தலிபான் தலைமைகள் பதில் எதனையும் இதுவரையில் வெளியிடவில்லை.
கடந்த காலங்களில் தலிபான்கள் சமாதானப் பேச்சுக்களுக்கு இணங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.