சிரியாவின் கிழக்கு கூட்டா மீது சிரிய படைகள் நடத்திவரும் தாக்குதல்கைளக் கண்டித்தும், அதனை நிறுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது
யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு எதிரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.
இதன்போது சிரியாவின் கூட்டாவில் இடம்பெற்று வரும் மனித படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அங்கு உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் வலயுறுத்தியுள்ளார்கள்.
சிரிய படுகொலைகளை கண்டித்து கிளிநொச்சியிலும் கண்டன கவனயீர்ப்பு
சிரியாவில் இடம்பெற்று வருகின்ற படுகொலைகளை கண்டித்து கிளிநொச்சியிலும் இன்று(01) கண்டன கவனயீர்ப்பு போராட்ம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இளைஞர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் இணைந்து சிரிய படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். குறிப்பாக சிரியாவில் குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிராக தங்களின் எதிர்ப்பினை இவர்கள் வெளிப்படுத்தியினர்.
ஜநாவே உனது கள்ள மௌனத்தை களை, ஈழத்திலிருந்து சிரியாவுக்கு குரல்,பொது மக்கள் கொல்லப்படுவதனை நிறுத்து, சிரியாவின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கு,2009 முள்ளிவாய்க்கால், 2018 இல் சிரியா, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் கண்டன கவனயீர்ப்பில் ஈடுப்பட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.