குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இருபதுக்கு இருபது போட்டிகளில் நியூசிலாந்து அணியை பயிற்றுவிப்பதற்கு தயார் என அணியின் முன்னாள் தலைவர் ஸ்டிபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராக தற்போது மைக் ஹேசன் கடமையாற்றி வருகின்றார்.
அவரது வேலைப்பழுவினை குறைத்து இருபதுக்கு இருபது போட்டித் தொடர்களுக்கான நியூசிலாந்து அணியை பயிற்றுவிக்கும் பொறுப்பு தமக்கு கிடைக்கப்பெற்றால் அதனை செவ்வனே நிறைவேற்ற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மைக் ஹேசனின் பங்களிப்பு அளப்பரியது என சுட்டிக்காட்டியுள்ள அவர் கடுமையான வேலைப்பழு காரணமாக பயிற்றுவிப்பாளர் பணிகள் பிரித்து வழங்கப்படுவது மேலும் சிறந்த முறையில் பயிற்றுவிப்பாளர்கள் செயற்படுவதற்கு உந்து சக்தியாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.