குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
உமா ஓயா திட்டத்தை விடவும் துறைமுக அபிவிருத்தி நகர்த் திட்டம் ஆபத்தானது என சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர். உமா ஓயா திட்டத்தின் மூலம் சுற்றாடலுக்கு ஏற்பட்ட ஆபத்துக்களை விடவும், துறைமுக நகரினால் அதிகளவு ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர் இந்த திட்டத்தினால் ஏற்படக்கூடிய சுற்றாடல் பாதிப்புக்கள் குறித்து கடந்த 2011ம் ஆண்டு முதல் மக்களை தெளிவுபடுத்தி வருவதாக சூழலியலாளர் சஜீவ சமிகார தெரிவித்துள்ளார். தற்போது இந்த ஆபத்துக்கள் இடம்பெற்று வருவதாகவும் ரத்மலானை மற்றும் நீர்கொழும்பு கரையோரப் பகுதி அரிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதிகளில் சீரற்ற அலைகள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடல் அரிப்பினை தடுப்பதற்காக அரசாங்கம் கடந்த ஆண்டு 1500 மில்லியன் ரூபாவினை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.