Home இலங்கை வட்டுவாகல் பாலத்தில் சிவப்பு வர்ண கொடியை பறக்க விட்ட இராணுவம்…

வட்டுவாகல் பாலத்தில் சிவப்பு வர்ண கொடியை பறக்க விட்ட இராணுவம்…

by admin

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தில் சுமார் 22 அடி உயரத்தில் சிவப்பு வர்ண கொடி ஒன்று நேற்று காலையில் பறக்க விடப்பட்டு மாலை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடி எதற்காக பறக்க விடப்பட்டு அகற்றப்பட்டது என மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது

200 மீற்றர் நீளமுடைய வட்டுவாகல் பாலம் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யப்படாமையினால் ஒரு வழி பாதையாக காணப்படும் இந்த பிரதான வீதி பாலத்தில் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்தும் உள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பாலத்தின் நடுவே 22 அடி உயரத்தில் சிவப்பு வர்ண கொடி ஒன்று பறக்க விட்ட போது இது பாதுகாப்பு எச்சரிக்கையாக இருக்கும் என கருதிய மக்கள் அச்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த கொடியினை அருகிலுள்ள இராணுவத்தினரே நட்டதாகவும் மாலையில் அவர்கள் கழற்றி சென்றதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More