சிரியா அரச படையின் கிழக்கு கூட்டா பகுதியில் கடந்த 13 நாட்களாக மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களில் 674 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கவுட்டா பகுதி யில் கடந்த 13 நாட்களாக அரசுப் படை நடத்திய தாக்குதல்களில் 674 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர் எனவும் அங்கு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வைட் ஹெல்மெட் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்த தீர்மானம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கிழக்கு கூட்டா உள்ளிட்ட பகுதிகளில் இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனாதிபதி; ஆசாத்துக்கு ஆதரவாக ரஸ்ய விமானப்படை நேரடி யாக போரில் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. சபையில் சிரியாவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்களை ரஸ்யா தடுத்து வருகிறது என அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது