Home இந்தியா “என் அம்மாவின் புனிதமான அன்பை களங்கப்படுத்தாதீர்கள்”

“என் அம்மாவின் புனிதமான அன்பை களங்கப்படுத்தாதீர்கள்”

by admin

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது பிறந்தநாளன்று அம்மாவின் அன்பு குறித்து  இன்ஸ்டாகிராமில்  உருக்கமான பதிவை  மேற்கொண்டுள்ளார்.

“என்னுடைய பிறந்தநாளில் நான் கேட்டுக்கொள்வது ஒன்று மட்டும் தான். அனைவரும் உங்கள் பெற்றோர் மீது அன்பு செலுத்துங்கள். அவர்கள் தான் உங்களை உருவாக்கினார்கள். மேலும் என்னுடைய தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்ளுங்கள். என் பெற்றோர்களுக்கு இடையேயான அன்பு மிகவும் புனிதமானது. அவர்கள் அன்பை களங்கப்படுத்தாதீர்கள். அவர் மிகச்சிறந்த நடிகை, தாய் மற்றும் மனைவி. அவர் தன் மீது அன்பு வைப்பவர்கள் மீது அதிக அன்பு செலுத்துவார். என் அம்மா எனக்கு சிறந்த தோழி. அவர் தான் என் வாழ்க்கை. அவரின் இறப்பு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இனி அவர் இல்லாமல் வாழ கற்றுக்கொள்வேன்.

அம்மா என்னை கவலை மற்றும் வலியிலிருந்து நீங்கள் பாதுகாத்து வந்தது எனக்கு தெரியும். உங்களை பெருமைப்படுத்தும் விதமாக நடந்து கொள்வேன். அதே எண்ணத்தில் இனி ஒவ்வொரு காலைப்பொழுதிலும் கண்விழிப்பேன். உங்கள் நினைவுகள் என்னை மிகவும் வலிமையாக்குகிறது. இருப்பினும் நீங்கள் இல்லாத குறையை யாராலும் ஈடு செய்ய முடியாது” என ஜான்வி கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More