Home இந்தியாஜெயலலிதாவின் நினைவிடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் தற்கொலை

ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் தற்கொலை

by admin


மறைந்த முன்னாள் தமிழக  முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி அமைந்துள்ள வளாகத்திலேயே அமைந்துள்ளது. இங்கு தினமும் பாதுகாப்புப் பணிக்கு ஆயுதப்படை காவலர்கள் நான்கு பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு அவர்களுக்கு ரைபிள் வகையைச் சேர்ந்த 303 வகை துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த மதுரையைச் சேர்ந்த சென்னை ஆயுதப்படையில் பணியாற்றி வந்த காவலரான 27 வயதான அருண்ராஜ் என்பவர் இன்று அதிகாலை வெருக்கு பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியால் சுட்டு தற் கொலை செய்துள்ளார். காவலர் அருண்ராஜ் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More