Home உலகம்பாதுகாப்புச் செலவு அதிகரிப்பு எந்த தரப்பையும் அச்சுறுத்துவதற்காக அல்ல – சீனா

பாதுகாப்புச் செலவு அதிகரிப்பு எந்த தரப்பையும் அச்சுறுத்துவதற்காக அல்ல – சீனா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாதுகாப்புச் செலவு அதிகரிப்பானது எந்தவொரு தரப்பினையும் அச்சுறுத்தும் நோக்கிலானதல்ல என சீனா தெரிவித்துள்ளது. அண்மைய ஆண்டுகளாக சீனாவின் பாதுகாப்புச் செலவுகள் உயர்வடைந்து செல்கின்ற நிலையில் சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது. சீனா எவ்வாறு பாதுகாப்பிற்காக செலவிடுகின்றது என்பது குறித்து பிராந்திய வலய நாடுகளும், அமெரிக்காவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

கடந்த ஆண்டில் சீனாவின் பாதுகாப்புச் செலவு முன்னைய ஆண்டை விடவும் 7 வீதத்தினால் உயர்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் நாட்டின் பொருளாதாரக் காரணிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் தேவைக்கு அமைய பாதுகாப்புச் செலவு நிர்ணயம் செய்யப்படுகின்றதே தவிர, வேறும் காரணிகளின் அடிப்படையில் அல்ல என சீன அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More