Home இலங்கைகாணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் பதவியிலிருந்து நிமால்காவை நீக்குமாறு கோரிக்கை

காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் பதவியிலிருந்து நிமால்காவை நீக்குமாறு கோரிக்கை

by admin

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் பதவியிலிருந்து நிமால்கா பெர்னாண்டோவை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குளோபல் ஸ்ரீலங்கா போரம் என்ற அமைப்பு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. அலுவலகத்தின் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள ஆணையாளர்களில் கலாநிதி நிமால்கா பெர்னாண்டோவை நீக்குமாறு கோரியுள்ளனர்.

உலகம் முழுவதிலும் வாழ்ந்து வரும் தேசப்பற்றுடைய இலங்கையர்களின் சார்பில் நிமால்காவின் நியமனத்தை கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளனர். நிமால்கா போன்றவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, அவர்களை பணி நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளனர். நிமால்காவின் நியமனம் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More