குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கண்டி – திகன நகரிலுள்ள பல வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கண்டி தெல்தெனிய பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இரு இனக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 41 வயதான நபர் ஒருவர் உயிரிழந்ததனைத் தொடர்ந்து கடந்த இரு நாட்களாக அப்பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதோடு, நேற்றிரவு 24 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை தெல்தெனிய காவல் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டபோது இரு தரப்பிற்கும் இடையில் மோதல் வெடித்தது. இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர காவல்துறையினர்; கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மேலும் இளைஞனது கொலை தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் அங்கு காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6.00 மணி வரையில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.