குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மிகப் பெரிய சவாலை எதிர்நோக்கி வருவதாக அவரின் பயிற்றுவிப்பாளர் பற்றிக் மொரடாக்ளோ (Patrick Mouratoglou ) தெரிவித்துள்ளார். முதல் குழந்i;த பிரசவத்தின் பின்னர் செரீனா போட்டிகளில் பங்கேற்பது சவாலுக்குரியது என தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், பிரெஞ்சு ஓபன் போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக 36 வயதான செரீனா சிறந்த திறமைகளை வெளிப்படுத்துவார் என பயிற்றுபிப்பாளர் தெரிவித்துள்ளார். மகப்பேற்று விடுமுறையில் செல்வதற்கு முன்னதாக கடந்த ஆண்டு செரீனா அவுஸ்திரேலிய ஓபன் போட்டியில் வென்று தனது 23ம் கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை பூர்த்தி செய்திருந்தார்.
இந்த ஆண்டில் மெல்பர்னில் நடைபெற்ற போட்டித் தொடரிலிருந்து செரீனா விலகிக் கொண்டிருந்தார். ஓராண்டுக்கு மேல் எந்தவொரு போட்டியிலும் பங்கேற்காது, மீளவும் போட்டிகளில் பங்கேற்பது மிகவும் சவால் மிக்க விடயம் என பயிற்றுவிப்பாளர் பற்றிக் தெரிவித்துள்ளார்.