சாய்ந்தமருது பிரதேசத்திற்கு முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று திங்கட்கிழமை செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பிரதேசத்தில்; கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன் சுவரொட்டிக ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காகவே அமைச்சர் ஹக்கீம் இன்று பிற்பகல் அங்கு செல்லவுள்ளார்.
கடந்த காலங்களில் இதற்காக பல கோடி ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதுடன் இம்முறை 16 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மீண்டும் திறக்கப்பட விருந்த தோணா அபிவிருத்திக்கான பெயர்ப்பலகையும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.