குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ராம்பிற்கும், இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாஹூவிற்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையானது ஈரானுக்கு எதிரான பலத்தை நிரூபிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் ஸ்தம்பிதம் அடைந்துள்ள சமாதான முனைப்புக்களை இந்த சந்திப்பு வலுப்படுத்தக் கூடிய சாத்தியங்கள் குறைவு எனத் தெரிவிக்கப்படுகிறது. ஈரானின் அணுத் திட்டங்களை எதிர்க்கும் வகையிலேயே இரு நாடுகளுக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளது. இஸ்ரேலிய பிரதமர் நெட்டன்யாஹூ தற்பொழுது அமெரிக்காவிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.