சென்னை அயனாவரத்தில் காவல் நிலைய வாசலிலேயே காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் ( எஸ்.ஐ ) ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 33 வயதான சதீஷ்குமார் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு வேலையில் சேர்ந்த தஞ்சாவூரைச் இவர் பணியில் சிறப்பாக செயல்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு தான் பணியாற்றும் காவல்நிலையத்துக்கு சாதாரண உடையில் வந்துள்ள அவர் தனிப்பட்ட வேலைகள் இருப்பதாக தெரிவித்து பிஸ்ட்ல் ஒன்றைப் பெற்றுக் கொண்ட அவர் கட்தாசியில் குறிப்பொன்றை எழுதி விட்டு அலுவலக வாசலுக்கு சென்று தற்கொலை செய்துள்ளார்.
காவலர் குடியிருப்பொன்றில் தனியாக வசித்து வந்த அவர் தற்கொலை செய்வதற்கு முன் சதீஷ்குமார் எழுதிய கடிதத்தில் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை எனவும் , எவ்வித காரணமுமில்லை எனவும் எழுதியுள்ளார்.