குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குர்திஸ் தலைவரை நாடு கடத்துவது குறித்து துருக்கி அரசாங்கம் விடுத்து வரும் கோரிக்கைகள் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என ஜெர்மன் தெரிவித்துள்ளது. ஜெர்மனிய வெளிவிவகார அமைச்சர் சிக்மார் கெப்ரியலும், துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லொட் சவ்சொக்லுவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
துருக்கி வெளிவிவகார அமைச்சர் தற்பொழுது ஜெர்மனிக்கு பயணம் செய்துள்ள நிலையில் குர்திஸ் தலைவரான சாலா முஸ்லிமை நாடு கடத்துமாறு துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது. அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இவ்வாறு குறித்த நபரை நாடு கடத்த முடியுமா என ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது