Home இலங்கைகிளிநொச்சியில் அமெரிக்கா பிரஜை ஒருவர் கொலை

கிளிநொச்சியில் அமெரிக்கா பிரஜை ஒருவர் கொலை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமெரிக்க பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர் ஒருவர் கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்டுள்ளார் என கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இனந்தெரியாத நபர்களால் நேற்று(06) இரவு தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(07) உயிரிழந்துள்ளார்

கிளிநொச்சி செல்வாநகரை சேர்ந்த 71 வயது இரத்தினம் துரைசிங்கம் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி கொலை செய்யப்பட்ட நபர் அமெரிக்க நாட்டின் பிராஜாவுரிமை பெற்றவர் எனவும் அவரது பிள்ளைகள் கனடாவில் வாழ்வதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் அவரது காணியில் அமைந்துள்ள வீட்டினைப் பார்வையிட வருகைதந்த போதே சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More