குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
துப்பாக்கி விற்பனை செய்யும் வயதெல்லை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக அமெரிக்க இளைஞர் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 20 வயதான ஒரேகொனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வால்மாட் ஐஎன்சி ( Walmart Inc ) மற்றும் டிக்ஸ் ஸ்போட்டிங் குட்ஸ் ஐஎன்சி ( Dick’s Sporting Goods Inc ) ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
அண்மையில் புளெரிடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு துப்பாக்கி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. 19 வயதான இளைஞர் ஒருவர் புளொரிடா கல்லூரியில் அண்மையில் துப்பாக்கிச் சூடு நடத்தியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் துப்பாக்கி விற்பனை செய்யும் வயதெல்லை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ரைலர் வட்சன் (Tyler Watson ) என்ற 20 வயதான இளைஞரே இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.