குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அரசாங்கம் தாய்ப்பாலுக்கும் வரி அறவீடு செய்வதாக முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் மீது வரிச் சுமையை திணித்து இந்த அரசாங்கம் வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அலவத்துகொட பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 100 நாள் வரவு செலவுத் திட்டத்துடன் அரசாங்கம் இந்த வரவு செலவுத் திட்டத்தை ஒப்பீடு செய்ய வேண்டுமெனவும், 100 நாள் வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தாய் ஒருவரினால் பிள்ளைக்கு பால் வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தாய் பிள்ளைக்கு பாலூட்டுவதனை பார்த்தால் அதற்கும் நிதி அமைச்சர் வரி விதிப்பார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.