குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
வடக்கு மாகாணத்தின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் இன்று(08) கிளிநொச்சியில் இடம்பெற்றது. காலை பத்து மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக இருந்து பெண்கள் தின ஊர்“வலம் அமைதியாக கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்திற்கு சென்றடைந்து அங்கு மண்டப நிகழ்வுகள் இடம்பெற்றது.
வடக்கு மாகாண பெண்கள் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஜரோப்பிய ஒன்றியத்தின் பதில் தூதுவர் Dr.Paul Godfrey, இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் உயரஸ்தானிகர் றொபினா பி. மார்க்ஸ், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், மாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் பெண்கள் அமைப்புகள் பெண்கள் என பலர் கலந்துகொண்டனர்.