குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஹாவா குழு என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். ஹாவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாடடின் பேரில் அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த 11 பேரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.
இந்தக் கைதுகள் சட்டவிரோதமானவை என கைதானவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்தே இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. களவு தொடர்பில் குற்றம் சுமத்தி கைதானவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டமை சட்டவிரோதமானது என குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சுமத்துவதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி தங்கவேல் கனகராஜ் தெரிவித்துள்ளார்.