கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று மீண்டும் இரவு 8 மணியில் இருந்து நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கண்டி மா நகர சபை பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இவ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கண்டி, திகன நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதனை தொடர்ந்து அங்கு காவல்துறை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கண்டி நிர்வாக மாவட்டத்தில் உள்ள சகல அரச பாடசாலைகளும் எதிர்வரும் 12 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என மத்திய மாகண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.