Home இலங்கையாழ் வீதிகளில் இராணுவத்தினர் சுற்றுக்காவல் பணிகளில்

யாழ் வீதிகளில் இராணுவத்தினர் சுற்றுக்காவல் பணிகளில்

by admin

( கோப்புபடம்)
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழில் இராணுவத்தினர் சுற்றுக்காவல் (ரோந்து) பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். யாழில் கடந்த ஒரு சில வருடங்களாக இராணுவத்தினர் முகாம்களில் முடங்கி இருந்தனர். அதனை தொடர்ந்து யாழில் பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரே பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையால் நாட்டில் அவசரகால நிலமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழில் துவிசக்கர வண்டிகளில் இராணுவத்தினர் வீதி சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை யாழ். கொக்குவில் பகுதியில் இன்று மாலை வர்ண நிறபூச்சு (பெயிண்ட்) கடையொன்றின் மீது இளைஞர்கள் குழு தாக்குதல் மேற்கொண்ட நிலையில் இன்றிரவு கொக்குவில் பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More