Home இலங்கைபரந்தன் முறிகண்டி சிற்றூர்திசேவை பணிப்பகிஸ்கரிப்பு…

பரந்தன் முறிகண்டி சிற்றூர்திசேவை பணிப்பகிஸ்கரிப்பு…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….

கிளிநொச்சி பரந்தன் முறிகண்டி சிற்றூர்த்தி சேவையினர் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் பரந்தன் பகுதியில் சிற்றூர்;தி நடத்துனர் ஒருவர் இளைஞர் குழுக்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தாக்கிய இளைஞர்களை காவல்துறையினருக்கு சிற்றூர்த்தி உரிமையாளர்கள் அடையாளம் காட்டிய போதும் அவர்களை கைது செய்யாமையினை கண்டித்தும் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அத்தோடு சில நாட்களுக்கு முன்னரும் பரந்தன் முறிகண்டி சிற்றூர்தியில் பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை தட்டிக் கேட்ட நடத்துனர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இது தொடர்பில் காவல்துறையினர் போதுமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் சிற்றூர்தி உரிமையாளர்கள் நடத்துனர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றை கண்டித்தே இன்றைய தினம் பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.

அதேவேளை பகிஸ்கரிப்பின் போது சம்பவ இடத்தில் தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்களில் சிலா் நிற்பதனை அவதானித்த சிற்றூர்தி உரிமையாளர்கள் காவல்துறையினருக்கு அடையாளம் காட்டியதனை தொடர்ந்து நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More