Home இலங்கைஆனமடுவ – தர்கா நகர் பகுதிகளில் உணவு விடுதி – வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்…

ஆனமடுவ – தர்கா நகர் பகுதிகளில் உணவு விடுதி – வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்…

by admin

ஆனமடுவ மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முஸ்லிம்களுக்கு சொந்தமான உணவு விடுதி  மற்றும் வீடொன்றின் மீது இரு வேறு பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ாதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குருணாகல் – புத்தளம் பிரதான வீதியில் ஆனமடுவ நகரில் அமைந்துள்ள மதீனா முஸ்லிம் உணவு விடுதி  மீதும், அளுத்கம – தர்கா நகர், அதிகாரிகொடவில் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வீடொன்றின் மீதுமே இந்த குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர்  தெரிவித்தனர். இந்த சம்பவங்களின் போது எவருக்கும் ஆபத்துக்கள் நேராத போதும் உணவு விடுதியும், வீடும் முற்றாக தீக்கிரையாகி கடும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்,  விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More