குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொக் உன்னை சந்திப்பில் உள்ள ஆபத்துக்கள் பற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ராம்பிற்கு தெரியும் என சீ.ஐ.ஏ பணிப்பாளர் மைக் பெம்போ ( mike pompeo) தெரிவித்துள்ளார். ட்ராம்ப் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கிலேயே இந்த சந்திப்பினை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், ட்ராம்பின் இந்த தீர்மானம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் மோசமடையச் செய்து குழப்பங்களை பூதாகாரமாக்கும் என ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் அணுவாயுத உற்பத்தியை கைவிடுமாறு ஜனாதிபதி ட்ராம்ப், வடகொரியாவிடம் கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் பதவி வகித்த எந்தவொரு ஜனாதிபதியும், வடகொரிய ஜனாதிபதியை சந்தித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.