குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமூக ஊடக வலையமைப்புக்கள் குறித்த தடை இரண்டு நாட்களில் நீங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகநூல், வட்ஸ்அப், வைபர், ஐம்மோ போன்ற சமூக ஊடகங்களை இலங்கையில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடாந்தே சமூக ஊடக வலையமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை இரண்டு நாட்களில் நீக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சமூக ஊடக வலையமைப்பினை இலங்கைத் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகமே முடக்கியுள்ளதாகவும் இந்த நிறுவனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் இயங்கி வருவதாகவும் டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக வலையமைப்புக்கள் குறித்த தடையை நீக்கும் நோக்கில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.