குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புங்குடுதீவு பகுதியில் இருந்து களவாடிய மாடுகளை சட்டவிரோதமாக கடத்தி சென்ற நபர் ஒருவர் மண்டைத்தீவு சோதனை சாவடியில் வைத்து ஊர்காவற்துறை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவு பகுதிகளில் களவாடிய மாடுகளை ‘பட்டா’ ரக வாகனத்தில் கடத்தி செல்ல முற்பட்ட வேளை மண்டைதீவு காவல் சோதனை சாவடியில் வைத்து மட்டக்களப்பை சேர்ந்த வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வாகனத்தில் இருந்து மாட்டுக்கன்றுகள் , பசுமாடுகள் என 7 மாடுகள் காவல்துறையினரினால்; மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் , குறித்த நபரையும் மீட்கப்பட்ட மாடுகளையும் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளனர்.