Home சினிமா‘நாடோடிகள் 2’ஐ தொடர்ந்து ‘சுந்தர பாண்டியன் 2’

‘நாடோடிகள் 2’ஐ தொடர்ந்து ‘சுந்தர பாண்டியன் 2’

by admin


‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து ‘சுந்தர பாண்டியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சசிகுமார் நடிக்கின்றார். இயக்குனர்   சமுத்திரக்கனி இயக்கிய கடந்த 2009இல் வெளியான நாடோடிகள் படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது திரைப்படமாக்கப்பட்டு வருகிறது. சசிகுமார், அஞ்சலி, எம்.எஸ்.பாஸ்கர், அதுல்யா, பரணி, நமோ நாராயணன் முதலியோர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.

இதேவேளை இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘சுந்தர பாண்டியன்’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் சசிகுமார் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான  சுந்தரண பாண்டியன் படத்தில் சசிகுமாருக்கு நாயகியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார்.

‘நாடோடிகள் 2’ நிறைவடைந்த உடன் ‘சுந்தர பாண்டியன் 2’இல் சசிக்குமார் நடிக்க உள்ளார். எஸ்.ஆர்.பிரபாகரன், ‘சுப்ரமணியபுரம்’ மற்றும் ‘ஈசன்’ படங்களில் சசிகுமாரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More