Home இலங்கைஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் புதிய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார்

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் புதிய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் புதிய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார் என கட்சியின் உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான திலிப் வெதாரச்சி தெரிவித்துள்ளார். மலர்மொட்டின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தோற்கடிக்ககூடிய வகையில் ஓர் வேட்பாளரை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தங்காலை காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்பொழுத நிலவி வரும் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்களை முன்வைக்குமாறு உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது மக்கள் எமக்கு உணர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இனவாதத்தை தூண்டும் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவோருக்கு இனியும் இடமில்லை எனவும் திலிப் வெதாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More