குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியாவுடனான பேச்சுவார்த்தைகளின் போது மனித உரிமை விவகாரம் பற்றியும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரியுள்ளது. வடகொரியாவுடன் அணுவாயுதங்கள் தொடர்பிலான விடயங்களுடன் மனித உரிமை விவகாரங்களும் உள்ளடக்கப்பட வேண்டுமென கோரியுள்ளது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொன் உன்னுடன் சந்திப்பு நடாத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் இணக்கம் வெளியிட்டிருந்தார். இந்தநிலையிலேயே ஆயுதங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளின் நிகழ்ச்சி நிரலில் மனித உரிமை விவகாரங்கள் குறித்தும் உள்ளடக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி தோமஸ் ஓஜா குய்டனா ( Tomas Ojea Quintana )தெரிவித்துள்ளார்.