குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்லோவாக்கியாவில் ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதனால் அந்நாட்டு பிரதமர் ரொபேர்ட் பிகோ பதவிவிலகியுள்ளார். அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஜான் கியுசியாக் என்னும் ஊடகவியலாளரும் அவரது காதலியான மார்டினா குஸ்நிரோவா கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அண்மையில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரொபேர்ட் காலினாக் பதவிவிலகியிருந்தார். இந்தநிலையில் தற்பொழுது பிரதமர் ரொபேர்ட் பிகோவும் பதவிவிலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஸ்லோவாக்கியாவில் ஊடகவியலாளர் கொலையைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் பதவிவிலகியுள்ளார்
Mar 13, 2018 @ 00:25
ஸ்லோவாக்கியாவில் ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ரொபேர்ட் காலினாக் (Robert Kalinak) பதவிவிலகியுள்ளார். ஜான் கியுசியாக் (Jan Kuciak) என்னும் ஊடகவியலாளரும் அவரது காதலியான மார்டினா குஸ்நிரோவா கொலை செய்யப்பட்டிருந்தனர்.
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஜான் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தக் கொலை ஆளும் கூட்டணிக்குள் பெரும் முரண்பாட்டை ஏற்படுத்தியிருந்ததனைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் காலினாக் பதவிவிலகியுள்ளார்