Home இலங்கைசமூக ஊடக வலையமைப்பு மீதான தடை பாரிய பாதகத்தை ஏற்படுத்தும் – அமெரிக்கா

சமூக ஊடக வலையமைப்பு மீதான தடை பாரிய பாதகத்தை ஏற்படுத்தும் – அமெரிக்கா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சமூக ஊடக வலையமைப்புக்கள் மீதான தடை பாரிய பாதகத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப் இதனைத் தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் நாட்டின் நன்மதிப்புக்கும் இந்த சமூக ஊடகப் பயன்பாட்டுத் தடை பாதக நிலைமையை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து வரும் சொந்தங்களுடன் தொடர்புகளை பேணுவதற்கு இலங்கை வாழ் மக்கள் சமூக ஊடக வலையமைப்புக்களையே அதிகம் நம்பியிருக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More