Home உலகம்அன்டார்டிக்காவில் சிக்கியிருந்த அமெரிக்க விஞ்ஞானிகளை மீட்ட ஆர்ஜன்டீன கடற்படையினர்

அன்டார்டிக்காவில் சிக்கியிருந்த அமெரிக்க விஞ்ஞானிகளை மீட்ட ஆர்ஜன்டீன கடற்படையினர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அன்டார்டிக்காவில் சிக்கியிருந்த அமெரிக்க விஞ்ஞானிகளை ஆர்ஜன்டீன கடற்படையினர் மீட்டுள்ளனர். அன்டார்டிக்காவில் சிக்கியிருந்த நான்கு அமெரிக்க விஞ்ஞானிகளையும், ஒரு ஒப்பந்தகாரரையும் கடற்படையினர் இவ்வாறு பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

கடலில் கடுமையான பனிப்படலம் ஏற்பட்ட காரணத்தினால் அமெரிக்க கப்பலினால் விஞ்ஞானிகள் ஆய்வு செய்த இடத்திற்கு சென்றடைய முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். இந்த நிலையில், ஆர்ஜன்டீன கடற்படையினரின் குறித்த ஐந்து பேரையும் மீட்டுள்ளனர். அன்டாடின் குடாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜொயின்வில்லி தீவில் இந்த ஐந்து பேரும் ஆய்வு நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More