Home உலகம் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டக்கோரி அமெரிக்காவில் மாணவர்கள் பாரிய போராட்டம்

துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டக்கோரி அமெரிக்காவில் மாணவர்கள் பாரிய போராட்டம்

by admin


அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டக் கோரி அனைத்து மாகாணங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். புளோரிடா மாகாணத்தில் கடந்த மாதம் முன்னாள் மாணவர் கொல்லப்பட்டிருந்தனர். புளோரிடா மாகாணத்தில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் இதுவரை 7 ஆயிரம் மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களினால கொல்லப்பட்டுள்ளனர்

மேலும் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 1300 மாணவர்கள் கொல்லப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றையதினம் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்து போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்தப் போராட்டத்தினை அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கி தாக்குதலுக்கு எதிரான பதாகைகளை ஏந்திக்கொண்டு ஊர்வலமாக சென்ற மாணவர்களுடன் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுவரை துப்பாக்கி தாக்குதல்களில் கொல்லப்பட்ட சுமார் 7 ஆயிரம் பேரின் காலணிகள் வெள்ளை மாளிகையின் வெளியே வைக்கப்பட்டு துப்பாக்கிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடக்கும் போது இரங்கல் தெரிவிக்கும் அமெரிக்க பாராளுமன்றம் துப்பாக்கிகளை கட்டுப்படுத்த தவறி விட்டது என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேவேளை துப்பாக்கி தாக்குதல்களில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் வண்ணம் அமெரிக்க பாராளுமன்றத்தில் சிறப்பு சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

1 comment

K.Ranjithkumar March 17, 2018 - 9:12 am

Ohhh this is so sad scenario that each year 1300 students were succumbed due to this usage of fire arms in so call world Police men USA. It’s so sad revelation where USA is saying all thoughts to the world at large but fail to nab down violence as well wide spread corruption over their own land. may God bless our Globe.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More