23 ரஸ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற பிரித்தானியா கெடு விதித்துள்ளதனை அடுத்து ரஸ்யாவில் பணியாற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த பணியாளர்களும் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என ரஸ்ய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெளியேற்றம் நிச்சயம் இடம்பெறும் என ரஸ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ரஸ்ய முன்னாள் உளவாளியான செர்ஜய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் மீதான கொலை முயற்சி தொடர்பாக உரிய விளக்கத்தை ரஸ்யா தெரிவிக்காமையினால் பிரித்தானியாவில் பணி புரியும் 23 ரஸ்ய அதிகாரிகளை பரித்தானியா வெளியேற்றும் என பரித்தானிய பிரதமர் தெரீசா மே நேற்றையதினம் அறிவித்திருந்தார்.
அந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்துள்ள ரஸ்யா பிரித்தானியாவின் நடவடிக்கை பொறுப்பற்றது எனவும் அடிப்படை ஆதாரங்களின்றி எடுக்கப்பட்ட முடிவு எனவும் தெரிவித்துள்ளது