அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்படுகின்ற பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளனது
இடிபாடிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பிணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தப் பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது எட்டு வாகனங்கள் நொருங்கியதாகவும் பாலத்திற்கு அடியில் இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெளிவாக தெரியவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 950 தொன் எடை மற்றும் 53மீ நீலமான அந்த பாலம் சனிக்கிழமை வெறும் ஆறு மணி நேரத்தில் நிறுவப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.