குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதிமன்றம் இந்த பிடிவிராந்து உத்தரவினை பிறப்பித்துள்ளது. திறந்த பிடிவிராந்து உத்தரவு இவ்வாறு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2016 ஒக்ரோபர் மாதம் 20 உதயங்கவிற்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மிக் விமான கொடுக்கல் வாங்கல்களில் மோசடி செய்ததாகவும், நிதிச் சலவையில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உதயங்கவை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.