குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில்விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துடன் சில ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களான சத்துர சேனாரட்ன மற்றும் விஜயதாச ராஜபக்ஸ ஆகியோர் ரணிலை பதவி கவிழ்ப்பதில் தீவிரம் காண்பித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பதினைந்து உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக செயற்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராஜாங்க அமைச்சர்களான பாலித ரங்கே பண்டார, வசந்த சேனாநாயக்க ஆகியோரும் ரணிலுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அதுரலிய ரதன தேரரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாகவே செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது